ஹைதராபாத், நவ- 13, “
பன்சு ” கணிதம் கற்பிக்கும் நிறுவனம் 16.5 மில்லியன் டாலர் நிதியை பெற்று உலகளவில் விரிவாக்கம் செய்கிறது.
உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்று அழைக்கபடும் நீலகண்ட பானுவால் நிறுவப்பட்ட உலகளாவிய கணிதக் கற்றல் ஸ்டார்ட் அப் நிறுவனமான பன்சு, எபிக் கேபிட்டல் நிறுவனத்திடமிருந்து ” பி ” தொடர் நிதியை பெறவுள்ளது. இசட் 3 வென்ச்சர்ஸ், எலைட் ரோட்ஸ், லைட்ஸ்பீட் வென்ச்சர்ஸ் -ன் தொடர்ச்சியான ஆதரவுடன் 16.5 மில்லியன் டாலர்களை இந்நிறுவனம் திரட்டியுள்ளது.
பன்சுவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, நீலகண்ட பானு, லண்டனில் 2020 மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக்கில் மன கணக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியராவார்.
பன்சுவின் நிறுவனர் நீலகண்ட பானு செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:–
பன்சு தொடங்கிய குறுகிய காலத்தில் 8 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது. பன்சு கல்வித்திட்டம் கணிதம் மூலம் மாணவர்களையும் கல்வியாளர்களையும் நிஜ வாழ்க்கையில் இணைக்கிறது. இது பெற்றோர்களின் கவனத்தை கவனத்தை பெறுகிறது.
இந்த முதலீடு அடுத்த 5 ஆண்டுகளில் 100 மில்லியன் மாணவர்களை சென்றடையும் மேலும்
இது இந்தியா, அமெரிக்கா., பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கணிதத்தின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்த உதவிகரமாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பன்சு ஒவ்வொரு மாணவரின் ஆற்றல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பாடங்களை எளிதான முறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்பிக்கிறது.
கோவிட்-19 பொது முடக்கத்தின் போது, பன்சுவின் புதுமையான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய அணுகுமுறை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியை வழங்குகிறது. இதனால் அவர்கள் வீட்டிலிருந்தவாறு கணித பாடத்தை எளிதாக கற்றுக்கொள்கின்றனர்
என்று தெரிவித்தார்.