ஆரல்வாய்மொழி ஜன 10
இஸ்ரோ புதிய தலைவராக பொறுப்பேற்க்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த வி.நாராயணன் -க்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
‘முயற்சி திருவினையாக்கும்”, ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பதற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் இஸ்ரோவவின் தலைவராக புதிதாக பொறுப்பேற்க்கும் வி.நாராயணன் எளிய முறையில் வாழ்ந்து படிப்படியாக முன்னேறி வாழ்க்கையில் ஏற்றம் கண்டவர். இவர் கன்னியாகுமரி மாவட்டம், மேல காட்டுவிளையை சார்ந்தவர் ஆவார். தனது கல்வி பயணத்தை காட்டுவிளை அரசு பள்ளியில் தொடங்கி, இப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தும், இதனை தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை சியோன்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார். தொடர்ந்து டிப்ளமோ புனே கிராத்தூர் ஐ.ஐ.டி-யில் மேற்படிப்பை படித்து முடித்து இஸ்ரோவில் இணைந்தார். வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சி இயக்குநராக பணியாற்றி ஜனவரி 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கிறார். வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து முன்னேற்றம் கண்டவர். கல்வி, தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி காண முடியும் என்பதை இவர் நிருபித்துள்ளார். இந்நிலையில் அவர் இப்பதவியை அடைந்ததன் மூலம் நாடும், தமிழ் மண்ணும், குமரி மண்ணும் மகிழ்ச்சி கொள்கிறது. பெருமை அடைகிறது. அவர் இன்னும் பல்வேறு உயர் பதவிகளை அடைந்து நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், குமரி மண்ணுக்கும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார். அவருக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.