தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாரதிதாசன் இளைஞர் மன்றத்தின் சார்பில் 47- ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக தருமபுரி பாரம்பரிய சிலம்பம் கலைக்குழுவினரின் சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் ,கோலாட்டம் ,ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.தருமபுரி பாரம்பரிய சிலம்ப சங்கத்தின் பயிற்சியாளர் முருகன் மற்றும் பாவெல்ராஜ் கலந்து கொண்டனர்.



