சேலம் மாவட்டம்:
சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற புதுக்கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் தை மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் ஆடு கோழி பலி கொடுத்து மாவிளக்கு ஏற்றியும் அலகு குத்துதல் அக்னி கரகம் பூ கரகம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இத் திருவிழாவில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.