தென்காசி மாவட்ட பாஜக புதிய மாவட்ட தலைவர் அறிமுக விழா
தென்காசி மாவட்ட பாஜக புதிய மாவட்ட தலைவராக ஆனந்தன் அய்யாசாமி பொறுப்பேற்று இருக்கிறார் பொறுப்பேற்று இருப்பதை அடுத்து புதிய மாவட்ட தலைவர் அறிமுக விழா தென்காசி இசக்கி மஹாலில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த பாஜக முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மேலும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஆயிரக் கணக்கான தொண்டர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.