கோவில்பட்டி மே 1
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறு யூனியன், ஆத்திகுளம் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு காளியம்மன் மாரியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது, இவ்விழா அழைப்பினை ஏற்று திமுக சார்பில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார், ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மேளதாளம் முழங்க சிறப்பான முறையில் வரவேற்றனர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரப்பெருமாள் தலைமை வகித்தார், ஊராட்சி செயலாளர் ஐய்யப்பன் மற்றும் திமுக மகளிர் அணி கருமாரியம்மள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை துணை அமைப்பாளர் ஜெபசிங், ராஜா புது குடியைச் சேர்ந்த பால்ராஜ், கிளைச் செயலாளர் சதீஷ்குமார், திருமங்கலம் குறிச்சி பரமசிவம், ஊர் பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்