தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான உறியடித்தல் ,கயிறு இழுத்தல், மியூசிக் சேர், கோலப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் திருவிழாவை சிறப்பித்தார்கள்.



