உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஜெர்மனியின் மியூனிக் தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தை (Technical University of Munich) தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு, பேராசிரியர்களுடன் கலந்துரையாடினர்.
“ஓம்” விதியினை கண்டுபிடித்த George Simon Ohm சிலை அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அச்சிலையினையும் பார்வையிட்ட தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் அவரின் அறிவியல் கண்டுப்பிடிப்பு வரலாறு குறித்தும் கேட்டறிந்தார்கள்.