திருப்பத்தூர் :செப்:06, திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இக்கோரிக்கையின் போது M. சபரிநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் M. கிருஷ்ணன், மாநில பொது குழு V.சுரேஷ்,N.கோபிநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் S. பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் எழுப்பிய கோரிக்கைகளான: சரியான எடையில் தரமான பொருட்களை அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். 100% அளவில் பொருள்களை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் விநியோகிக்கும் வகையில் பொருள்கள் அனைத்தும் உரிய காலத்தில் ஒரே நேரத்தில் வழங்கிட வேண்டும். மத்திய வசிய பொருள்கள் முயற்சிகளும் லாரிகளில் நடமாட்ட பணியாளர் மற்றும் எடை தராசு வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் திறக்கப்படும் பொருள்களுக்கு கட்டாய இறக்கு கூலி வசூல் செய்வதை தவிர்க்கவும், ஆண்டிற்கு ஒரு முறை பொது மக்களின் கருத்துக்களை கேட்டு தேவையான பொருள்களை ஏதுவாக வழங்கிடவும்,PHH குடும்ப அட்டைகளுக்கு மூன்று முறை பில் போடுவதை தவிர்க்க வேண்டியும், NPHH குடும்ப அட்டைகளுக்கு இரண்டு முறை பில் போடுவதை தவிர்க்கவும் வேண்டும். மத்திய அரசு பொருட்களை ஆறு மாத காலத்திற்கு தேவையான பொருள்களை இறக்கிட வேண்டும். நியாய விலை கடைகளை FPS செயலி மூலம் ஆய்வு செய்வதை கைவிட வேண்டும் ஆகிய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் போராட்டக் குழு தலைவர்கள் M.முத்துக்குமார், மகளிர் அணி A. கார்த்திகா, பரிமளா, தெய்வானை, மனோன்மணி, கனிதா மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.



