By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்ப் புதல்வன் திட்டம் : 4987 மாணவர்கள் தகுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தமிழ்ப் புதல்வன் திட்டம் : 4987 மாணவர்கள் தகுதி
தூத்துக்குடிமாவட்டம்

தமிழ்ப் புதல்வன் திட்டம் : 4987 மாணவர்கள் தகுதி

Last updated: August 13, 2024 2:28 pm
August 13, 2024
53 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2024-2025 ஆம் நிதியாண்டில் 58 கல்லூரிகளில் 4987 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 பெற உள்ளனர் என்று ஆட்சியர் தெரிவித்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

அதனைதொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறும் வங்கி கணக்கிற்கான அட்டைகளை வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: உயர்கல்வியில். பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்” பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதைப் போல் அரசு பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் ‘தமிழ்ப்புதல்வன்” எனும் மாபெரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வருமான உச்ச வரம்பு, இனம் மற்றும் ஒதுக்கிட ஆகிய எந்த வொரு பாகுபாடும் இன்றி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களும் பயனடைவார்கள். மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைவார்கள். அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். 

பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது. கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது, கற்கும் ஆர்வத்தைப் பெருக்குகிறது. பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது. குடும்பங்களின் வளத்தை மேம்படுத்துகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.

வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும் இத்திட்டத்தில் பயனடைவார்கள். ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ இத்திட்டம் பேருதவி புரிகிறது என தெரிவித்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-2025 ஆம் நிதியாண்டில் 58 கல்லூரிகளில் 4987 தகுதி வாய்ந்த மாணவர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் தேரடிமணி, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.பிரேமலதா, திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், ஒன் ஸ்டாப் சென்டர் செரின், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்த், தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி கல்லூரி முதல்வர்  முனைவர் ப.முத்துராஜ் , செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன்,கிழக்கு ஓன்றிய செயலாளரும் கிழவல்லநாடு பஞ்சாயத்து துணை தலைவருமான சுரேஷ் காந்தி, மேயர் நேர்முக உதவியாளர் ஜேஸ்பர் ஞான மார்டின்,பிரபாகர், சட்டமன்றத் உறுப்பினர் நேர்முக உதவியாளர் பாபு, ஆகியோர்கள் மற்றும் மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!!
பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா: விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
மார்த்தாண்டம் மேம்பால பணிகளை விரைந்து
பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்
அரசு உயர்நிலை பள்ளியில் குடியரசு தின விழா கொடியேற்றம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

August 30, 2024
43 Views
கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா
குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.
நாம் தமிழர் கட்சியினர் கலெக்ட்டரிடம் மனு
கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account