கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் வருகின்ற 14ம் தேதி முதன்முறையாக மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து, காடுகளை காக்கும்ப பொருட்டும், போச்சம்பள்ளி மக்களின் ஆரோக்கியத்தை பேணி காக்கும் பொருட்டு, மாராத்தான் போட்டி அறிவித்துள்ளனர். இதில் 21 கி.மீ. தூரம், 10.கி.மீ. தூரம் மற்றும் 5கி.மீ. தூரம் ஆகிய தூரங்களுக்கான போட்டி நடை பெற இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் பொது மக்கள் வரை பலர் இந்நிகழ்வில் ஆர்வதுடன் கலந்துக்கொள்ள முன் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் போச்சம்பள்ளி மாரத்தான் போட்டிக்கான டி-சர்ட் அறிமுக விழா போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. போட்டியை நடத்தும் விழாக்குழு உறுப்பனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 30ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். அப்போது பேசிய விழாக்குழுவின் உறுப்பினர் ஜெய் அவர்கள், மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் டி-சர்ட், ஹெல்த் டிரிங்க், உணவு உட்பட அனைத்தும் வழங்கப்பட உள்ளது. அதற்கான டி-சர்ட் அறிமுக விழா இன்று நடைபெற்றது என தெரிவித்தார்.



