தேனி செப் 30:
தேனி மாவட்டம் சுருளி அருவியில் 2019 ஆம் ஆண்டிற்கு பின்னர் கடந்த ஆண்டு சாரல் விழா நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடு செய்த பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் விழா நடைபெற்றது. கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் சுருளி அருவி சாரல் விழா நடத்துவது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டது .அந்த வகையில் செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி சுருளி சாரல் விழா அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. சாரல் விழாவின் தொடக்க நாளான செப்டம்பர் 28 ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மேகமலை வனச்சரக இணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் சாரல் விழாவை தொடங்கி வைத்தனர்.
தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் இந்த சாரல் விழாவில் ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ள சாரல் விழாவில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முதல் நாள் சென்னை சேராஸ் வழங்கும் பரதநாட்டியம், செங்கல்பட்டு மாவட்டம் மீனாட்சி ராகவன் வழங்கும் பரதநாட்டியம், சக்திவேல் கலைக் குழுவினர் வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சி இறைவி முண் கலைப் பள்ளி வழங்கும் பரதநாட்டியம், விளையாட்டு துறை சார்பாக விளையாட்டு போட்டிகள் இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் இருந்தும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், சின்னமனூர் பூலித்தவன் இலவச சிலம்பம் பயிற்சி பள்ளியின் சிலம்பாட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில்
வரவேற்புரை பாஸ்கரன் மாவட்ட சுற்றுலா அலுவலர், தலைமையுரை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, விழா பேருரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, வாழ்த்துரை தங்க தமிழ்ச்செல்வன் பாராளுமன்ற உறுப்பினர், நன்றியுரை இரா. நல்லதம்பி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் வழங்குகின்றனர்.