நாகர்கோவில் ஏப் 16
குமரி மாவட்ட முன்னாள் அமைச்சரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான சுரேஷ் ராஜனுக்கு தமிழ் நாடு மாநில உணவு ஆணைய தலைவர் பொறுப்பு வழங்கி அரசாணை வெளியிட்ட பட்டதைத் தொடர்ந்து குமரி திமுகவினர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.
தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக என்.சுரேஷ்ராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டதை அடுத்து நேற்று அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து
குமரி மாவட்டம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்ட திமுகவினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் முன்னாள் மாவட்ட பிரதிநிதி சகாய ஜெரால்ட் ஆகியோர் தலைமையில்
ராமன் புதூர் கலுங்கு ஜங்ஷனில் முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்க, சின்னவர் உதயநிதி வாழ்க சுரேஷ் ராஜன் வாழ்க என ஆனந்த முழக்கமிட்டு பட்டாசு வெடித்தும் அப்பகுதியில் உள்ளவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் இராமன்பதூர்,வடசேரி அண்ணா சிலை,கோட்டார் ரயிலடி,வடிவீஸ்வரம், கணேசபுரம்,வேப்பமூடு,அண்ணா பேருந்து நிலையம்,மேலராமன்புதூர்,செட்டிகுளம்,இராஜாக்க மங்கலம்,முட்டம், குளச்சல் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் உற்சாக மிகுதியுடன் நூற்றுக்கணக்கான கழக உடன்பிறப்புகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதேபோல் மேற்கு மாவட்டத்திலும் சுரேஷ் ராஜனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இந்நிகழ்வில்
முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் ஐடி பிரிவு செல்வின் சதீஷ், வட்டச் செயலாளர்கள் அமல ராஜா, விமல், ராஜேஷ், ரஞ்சித், பாரி,போஸ், தர்மராஜ்,சுனில் முன்னாள் வட்டச் செயலாளர்கள் சார்லஸ், சோபின், சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் சுதன், சௌந்தர்ராஜன், நாராயண பெருமாள், வழக்கறிஞர்கள் சிவ கோடீஸ்வரன், பெருமாள் நிர்வாகிகள் ராஜு, ஜெயக்குமார்,குமார், உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.