வேலூர்=18
வேலூர் மாவட்டம் ,காட்பாடி சன்பீம் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடந்து. விழாவிற்கு சன்பீம் பள்ளி கவுரவ தலைவர் டி.ஹரிகோபாலன் தலைமை தாங்கி பேசினார். தாளாளர் தங்கபிரகாஷ், துணைத்தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ரத்தீஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக காட்பாடி அக்சீலியம் கல்லூரி முதல்வர் ஆரோக்கியஜெயசீலி கலந்துகொண்டு கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்
தலைமைப் பண்புக்கு உதாரணமாக பள்ளி கவுரவத் தலைவர் ஹரி கோபாலன், தாளாளர் தங்க பிரகாஷ் ஆகியோர் திகழ்கின்றனர் இவர்கள் மாணவர்களுக்கு கல்வியில் நல்வழி காட்டி வருகின்றனர்.