வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற 2ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் அம்மன் திருவீதி உலாவும் கெங்கை அம்மன்சிரசு ஊர்வலமும் கண் திறப்பு நிகழ்ச்சிகளும் சிரசு ஏற்றுதலும் மாலை வான வேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலாவும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக மேட்டுக்குடி அப்புனு முதலியார் நாட்டான்மைகள் அப்பு மந்திரி, சேகர் மந்திரி ,தலைமையிலும் சோழமூர் ஒன்றிய கவுன்சிலர் சேர்மன் எல். ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது உடன் சோழமூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயரணி சுந்தரம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லோகநாதன், மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள் ,இளைஞர்கள், பலர் கலந்து கொண்டனர்.



