அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் ஒருபுறம் வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும், மறுபுறம் சாரல் மலையும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மலையோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக பேச்சுப் பாறை பகுதியில் 79.2 மி.மீ. மழை பெய்தது. முக்கடல் அணையில் 9, பாலமோர் 5.2, சிற்றார் – 1ல் 51.2, சிற்றார் – 2ல் 20.4, களியல் 16.2, திற்பரப்பு 36.8, மி. மீட்டரும் மழை பெய்திருந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர் மற்றும் 33.71 அடியாகும். அணைக்கு1060 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெருஞ்சாணி நீர்மட்டம் 34.2 அடியாகும் அணைக்கு 232 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 22 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார் 1- ல் 3.71 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 60 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார் 2- ல் 3.8 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 94 கன அடி தண்ணீர் வரத்து காணப்படுகிறது. பொய்கையில் 14.9 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 24.28 அடியும் நீர் மட்டம் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 4.6 அடியாகும்.