கிருஷ்ணகிரி,பிப்.2- கிருஷ்ணகிரி அருகே உள்ள மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள நாளாந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
பள்ளி தாளாளர் பீரித்தி தலைமையில் நடைப்பெற்ற பொங்கல் திரு நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள்
புது பானையில் பொங்கல் சமைத்து படையல் இட்டு சூரிய பகாவானை வழிபட்டனர்,
மேலும் இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் வண்ண உடையணிந்து கலந்துகொண்டு ஆடி பாடி கொண்டாடினர், விழாவில் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இதனை தொடர்ந்து பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றி அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர்.
இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று கலந்து கொண்டனர், முன்னதாக அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் அனைவரும் கைதட்டி கூச்சலிட்டு ஆரவாரத்துடன் மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் பார்வதி, உதவி ஆசிரியர்
சன்முக பிரியா சிலப்பு ஆசிரியர் குரு ராகவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்,