குலசேகரம், ஐன- 27
குலசேகரம் அருகே பொன்மனை பகுதி சேர்ந்தவர் வினோத் மனைவி ஜெய்சுபா (36). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 4 கிராம் தங்க நகை மற்றும் ரூ.8 ஆயிரம் போன்றவற்றை , யாரோ திருடி சென்று விட்டனர்.
இது குறித்து ஜெய்சுபா குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொன்மனை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அந்த மாணவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அந்த மாணவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மீட்கப்பட்டது.