தருமபுரி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழக மக்கள் மீது இந்தி, சமஸ்கிருத மொழியை திணிக்கும் மத்திய அரசையும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும் மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம் தருமபுரி மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நவீன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலைவகித்தார். முற்றுகைப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தியும், இந்தி, சமஸ்கிருத்த மொழி திணிப்பு க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேண்டாம், வேண்டாம், இந்தி, சமஸ்கிருத மொழி வேண்டாம்,வேண்டாம், மும்மொழி திட்டம் வேண்டாம், வேண்டாம் போன்றகோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் தீனா, கார்த்திக், ஆறுமுகம், பிரதாப், பிரபு ,முத்து, மணி, சபரிநாதன் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பொருளாளர் பிரசாந்த் நன்றியுரை ஆற்றினார்.



