நாகர்கோவில், மே 16:
நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் முகவர் பயிற்சி முகாம் நடந்தது.
இந்த பயிற்சி முகாமில் முகவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஏரியா மேனேஜர் சங்கர் உரையாற்றினார். இதில் அதிக பாலிசிகள் பிடித்த முகவர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசு பொருட்களும், கேடயமும் வழங்கப்பட்டது. உடன் டிவிஷனல் மேனேஜர் நாகர்கோவில் பிரான்ச் ஸ்ரீ குமார், பிளாட்டினம் சீனியர் மேனேஜர் சுவாமி அய்யனார், ட்ரெயினர் அகிலா, ஆண்டோ ஹெச் ஆர் எம் உட்பட அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர். சுவாமி அய்யனார் நன்றியுரை யாற்றினார்.