தேவாரம் அக் 14:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் அதிமுக கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எஸ் டி கே சக்கையன், முறுக்கோடை ராமர், ஒன்றிய செயலாளர் வினோத் பங்கேற்ற செயல் வீரர்கள் வீராங்கனை கூட்டம் மற்றும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்த செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான முன் ஏற்பாடு ஆலோசனை கூட்டத்தில் புதிய உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் சீனிவாசன் எம்ஜிஆர் திமுகவை எதிர்த்து கட்சியை ஆரம்பித்தார் அதனை அம்மா கட்டுக்கோப்பாக வளர்த்து வந்தார் தற்போது எடப்பாடியார் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார் வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றியடைந்து எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சிக்காக உழைக்க வேண்டும் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் கட்சியை வளர்த்து தேனி மாவட்டம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என பேசினார்
அதனை தொடர்ந்து பேசிய முருக்கோடை ராமர் எஸ் டி கே ஜக்கையன் கட்சியின் வளர்ச்சி பணியை எடப்பாடியார் கண்காணித்து வருகிறார் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கிராமம்தோறும் உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது அதனை தொடர்ந்து அதிமுக ஒன்றிணைந்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் சந்திக்கின்றோம் எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து 2026 ஆம் ஆண்டு எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் என்பதை மக்கள் புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்
இந்த விழா ஏற்பாட்டினை கிளைச் செயலாளர் மாடசாமி ஏற்பாடு செய்து இருந்தார் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் தொண்டர்கள் பேரூர் ஊராட்சி கழக செயலாளர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.