சென்னை, வளசரவாக்கம், ஆற்காடு சாலை, கைகான் குப்பம் பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த
கும்பாபிஷேக விழாவினைத் தொடர்ந்து மூலவருக்கு கலசாபிஷேகம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



