By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பயணத்தின் போது சிறுதானிய பதப்படுத்தும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பயணத்தின் போது சிறுதானிய பதப்படுத்தும்
மதுரைமாவட்டம்

பயணத்தின் போது சிறுதானிய பதப்படுத்தும்

Last updated: November 27, 2024 11:48 am
November 27, 2024
51 Views
Share
SHARE

மதுரை நவம்பர் 27,

 

மதுரையில் செய்தியாளர் சுற்று பயணத்தின் போது சிறுதானிய பதப்படுத்தும் மையத்தினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில் ஆய்வு மேற்கொண்டார்

 

தமிழ்நாட்டில் முதன் முறையாக மதுரை மாவட்டத்தில் சிறுதானியங்களை முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்களை வாங்குவதற்கு மானியமாக திட்ட மதிப்பில் 75% அல்லது அதிகபட்சமாக ரூ.18.75 இலட்சம் கடன் உதவி பெற்று திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் குழுவினால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்

 

மதுரை மாவட்டம். திருமங்கலம் வட்டாரம் சின்ன வாகைக்குளத்தை சேர்ந்த திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் குழுவினால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌசங்கீதா, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களுடன் ஆய்வு செய்தார்

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாசௌசங்கீதா தெரிவித்ததாவது,

தமிழ்நாடு அரசு சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விவசாயிகளிடம் சிறுதானியம் பயிரிடுவதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் பொதுமக்களிடமும் சிறுதானியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு சிறுதானிய உணவினை சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் வட்டாரத்தில் அதிகளவில் சிறுதானியங்கள் பயிரிடப்படுகிறது. சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும். விளைவிக்கின்ற சிறுதானியங்களை சந்தையில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் சிறுதானியங்கள் முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்களை அரசின் மானியத்தில் வாங்குவதற்கு விவசாயிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் கடந்த ஆண்டு நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இந்தாண்டு விண்ணப்பித்தவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு தற்போது சிறுதானியங்களை முதன்மைப்பதபடுத்தும் இயந்திரங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர் ரூபாய் 25 இலட்சம் மதிப்புடைய இயந்திரத்திற்கு அரசு மானியமாக 75 சதவீதம் சுமார் ரூ.18.75 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. சிறுதானியங்களை முதன்மைப்படுத்தும் இயந்திரம் சிறுதானியங்களில் உள்ள மண் ஆகியவற்றை நீக்கி சுத்தப்படுத்துவதுடன் பிற தானியர்கள் கலந்து விடாதபடி பிரித்து தனிதனியாக வழங்குகிறது. நல்ல தானியங்களை மட்டுமே பிரித்து வழங்குவதால் சிறுதானியங்களை தரமானதாக சந்தைகளுக்கு அனுப்ப முடிகிறது. இதனால் விவசாமிகளுக்கு கூடுதல் இலாபம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மாவட்டத்தில் சிறுதானியங்களை முதன்மைப்படுத்தும் இயந்திரம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கு ஆசின் மானியம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் திருமங்கலம் வட்டாரம் சின்ன வாகைக்குளத்தை சேர்ந்த திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் குழுவினால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தினையும் மையத்தில் செயல்பட்டு வரும் இயந்திரங்களை பற்றியும் திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் குழுவின் செயல்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் பயன்பெற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கிராமப்புற இளைஞர்கள், வேளாண் தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்கள். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 10 சதவிதம் மற்றும் வங்கி கடனை பெறவும் விருப்பம்முடையவராக இருத்தல் வேண்டும். ISO BIS தரச்சான்றிதழ்கள் பெற்ற இயந்திரங்கள் மட்டுமே தகுதியானதாக கருதப்படும். மற்ற திட்டத்தின் கீழ் இயந்திர மானியம் பெறாத பயனாளிகள் மட்டுமே இத்திட்டத்தில் மானியம் பெற தகுதியுடையவர். சிறுதானியம் அதிகமாக சாகுபடியாரும் மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அதிகபடியான வாய்ப்புகள் மதுரை விவசாயிகளுக்கு உள்ளது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 7 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இதில் நாளொன்றிற்கு 350 விவசாயிகள் தங்கள் காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக நுகர் வோர்களுக்கு விற்பனை செய்து பயனடைகின்றனர். மேலும் TNIAMP மற்றும் TNSFAC திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு 11070 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைப்பொருட்களை மூலப்பொருட்களாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக விற்பனை செய்வதால் நிகர இலாபம் கூடுதலாக கிடைக்கும். மேலும் 7 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் Digital முறையில் Flipkart மூலம் வணிகம் மேற்கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண் நவினமயமாக்கல்  (TNIAMP) திட்டத்தின் கீழ் புதிய மற்றும் ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ள வேளாண் தொழில் முனைவோரர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் (KAVIADP) திட்டத்தின் கீழ் கிராமங்களில் அறுவடைக்கு பின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தரம் பிரிப்புக்கூடாரத்துடன் கூடிய உலர் களம் கட்டப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றன. வேளாண் ஏற்றுமதி திட்டத்தின் தென்னை, சிறுதானியங்கள் முருங்கை, மஞ்சள், சின்னவெங்காயம் மற்றும் வெள்ளரி ஆகியவற்றை பயிரிடும் அப்டோ பயற்சி பெற்ற விவசாயிகளை தேர்வு செய்து அவர்களை ஏற்றுமதியாளராக மாற்ற உரிய சான்றிதழ்களை பெற்றுத்தரும் பொருட்டு ரூ.15,000/ அரசு மானியமாக வழங்கப்படுகிறது.

அகமாரி ஆய்வு (AGMARK) மூலம் மத்திய அரசின் வேளாண்மைத்துறையின் இயங்கும் வேளாண் விற்பனையாக்கம் மற்றும் ஆய்வு இயக்குநரகமும், மாநில அரசின் வேளாண் விற்பனை மற்றும ணிகத்தின் கீழ் இயங்கும் மாநில அக்மார்க் தரம்பிரிப்பு ஆய்வகமும் இணைந்து வேளாண் விளைப்பொருட்களின் தரம் மற்றும் சுத்தத்திற்கு தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே மதுரை மாவட்ட விவசாயிகள் அரசின் மானியத்தில் வழங்கப்பட்டு வரும் சிறுதானியங்கள் முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்களை பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌசங்கீதா  தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட அளவினை கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்களான வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கா. பொற்கொடி ஐஏஎஸ் பதவி ஏற்பு
தருமபுரியில் அதிமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம் – நயினார் நாகேந்திரன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை

August 23, 2024
139 Views
சிக்கன் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
தபால் வாக்கு பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை அவசியம்: கலெக்டர் அறிவுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account