சங்கரன்கோவில். ஜூலை.20.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடித்தவசு தேரோட்டம் நடைபெற்றது நான்கு ரத வீதிகளில் கோமதி அம்பாள் வீதி உலா அலங்காரத் தேரில் தேர் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்த நிகழ்ச்சி நடைபெற்றது
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் சங்கரநாராயண ர் கோமதி அம்பாள் திருக்கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தவசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.
இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருநாள் ஜூலை 11ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில் கோமதிஅம்பான் காலை தினமும் 9 மணிக்கு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் 9 ஆம் திருநாளான நேற்று 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆடித்தபசு 9ம் திருநாளை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் 5.40மணிக்கு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10.10 மணிக்கு தேரோட்டம் தொடங்கி ரத விதிகள் வழியாக தேர் வலம் வந்து 11 .09 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருநாள் ஜூலை 21ஆம் தேதி ஞாயிற்று கிழமை நாளை நடைபெறுகிறது. அன்று மாலை 6.05மணிக்கு மேல் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணனராகவும், இரவு 11.45 மணிக்கு மேல் சங்கரலிங்கமாகவும் காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.தேரோட்ட நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் , கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி சுரேஷ்குமார், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், முன்னாள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, ஆர் டி ஓ கவிதா, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி ,மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எம்ஜிஎம் நாராயணன், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா,சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு உறுப்பினர் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் பிரகாஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர் சரவணன், ராயல் கார்த்தி வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் சதீஷ்
நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி
,பிஜேபி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கரசிந்தாமணி, ஓய்வு பெற்ற தபால் அலுவலர் பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற விஏஓ சேது, ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி, மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன்,பிரகாஷ் வீரா வீரமணிகண்டன், ஜெயக்குமார் , ரமேஷ், சபரிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



