திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக சிறுகுறு விவசாயிகளுக்கு உழவர் திருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சமத்துவ பொங்கல் வைத்து நடத்தப்பட்டது. இதில் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் விவசாய உபகரணங்களை சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.



