தருமபுரி அ வ்யார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் ஆண்டு விழா ஆகியவைகளை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஜோதி சந்திரா முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்கினார். மகாத்மா மாவட்ட கல்வி அலுவலர் முத்துக்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னல் முதுகலை ஆசிரியர் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின்ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியர் சுதா வாசித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக அன்பழகன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பாஸ்கர் பள்ளி தத்தெடுப்பளர், சண்முகப்பிரியா பள்ளி மேலாண்மை குழு தலைவர்,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் குமார், சுருளிராஜன், ராஜா, முருகன், ரமேஷ், காசி, பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். முருகன் உதவி தலைமை ஆசிரியர் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், யோகா மற்றும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



