தருமபுரியில் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது குமாரசாமிபேட்டையில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசத்தில் முருகர் வள்ளி தேவானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதன் பின்னர் முருகர் வள்ளி தேவானையுடன் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.



