நீலகிரி. மார்ச். 20.
நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமை கழகத்தின் மாவட்ட சிறப்பு கூட்டம் நடந்தது அமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன், மாநில தலைவர் தினேஷ்குமார் அறிவுறுத்தலின்படி மாவட்ட புதிய தலைவர் ராஜதுரை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. . கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக ராஜதுரை, மாவட்ட துணை தலைவராக சந்திரசேகர், மாவட்ட செயலாளராக ராமநாதன், துணை செயலாளராக ஜெயக்குமார், ஒன்றியத்தின் தலைவராக ரமேஷ், மற்றும் நகர செயலாளராக செல்லத்துரை, துணை செயலாளராக புண்ணியமூர்த்தி, தொழிலாளர் அணியின் செயலாளராக எஸ். கண்ணன், ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக பதவியேற்றனர். மேலும் மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி பகுதி பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பொறுப்பாளர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சனை குறித்து பேசப்பட்டதுடன் மனித உரிமை அமைப்பின் செயல்பாடுகள், பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள் பொறுப்பாளர்களின் கடமைகள் குறித்து விளக்கப்பட்டது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



