நாகர்கோவில் மே 1
மாதாந்திர கூட்டத்திற்கு வந்த இடத்தில் கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஓய்வு எதிர்பார்க்காமல் சாலையில் இறங்கி சென்று ஆய்வு நடத்திய எஸ் பி ஸ்டாலினின் பணியை பாராட்டிய பொதுமக்கள்
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த அவர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலையில் திடீரென நடந்து சென்று அப்பகுதி சாலை வழியாக வரும் வாகனங்கள் வேகமாக வருகின்றதா என கண்காணித்தார்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களுக்கு செல்வோர் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதற்கு அனுமதிக்காமல் எப்போதும் தீவிர கண்காணிப்பில் இருக்கும்படியும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்ட அவர் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார்.
திடீரென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாலையில் இறங்கி நடப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவரின் செயலுக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இருந்தனர்.