திருப்பத்தூர்:ஜன:02,
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தெற்காசிய அளவிலான சலேசியர் இளையோர் மாநாடு 29-12-2024 அன்று தொடங்கி 4 நாட்கள் நிகழ்ச்சிகளானது 1-1-2025 அன்று நிறைவடைந்தது.
இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, நேபாளத்தைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சலேசிய இளையோருக்கான இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அறிவியல் விஞ்ஞானி டாக்டர் சுல்தான் இஸ்மாயில் அவர்கள் இளையோருக்கான அறிவியல், அறிவியல் சார்ந்த நாட்டின் வளர்ச்சியில் இளைஞருக்கான பங்ளிப்புகள் குறித்து விரிவாக விவரித்தார்.
மேலும் கல்லூரி வளாகத்தில் 2000 க்கும் மேற்பட்ட தெற்காசிய சலேசிய இளைஞர்கள் “நிலைத்து நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்கள்” என்னும் பொருண்மையில் மாபெரும் பேரணி நடத்தினர். இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இயற்கைப் பாதுகாப்பு, உலக ஒற்றுமை, உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் விதத்தில் பேரணி அமைந்தது. இப்பேரணியில் சென்னை மாநில சலேசியத் தலைவர் அருட்தந்தை டான் போஸ்கோ, கல்லூரி செயலர் அருட்தந்தை முனைவர் பிரவின் பீட்டர், கல்லூரி முதல்வர் முனைவர் மரிய அந்தோணிராஜ், ரோமில் இருந்து வருகைத்தந்த அருட்தந்தை பார்ட்டிக் அந்தோணிராஜ், அருட்தந்தை பார்ட்டிக் லெப்சா, அருட்தந்தை ஜான் கிறிஸ்ட்டி, அருட்தந்தை ஜேசுதாஸ், அருட்தந்தை ஜான் அலெக்ஸ், அருட்தந்தை ஜான் பரங்கிமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை அருட்தந்தை ஆம்புரோஸ், பேராசிரியர் ஆரோக்கியராஜ், செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இந்தியக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் சலேசிய இளைஞர்கள் ஆடை உடுத்தியும், நாட்டுப்புறக் கலைகளை வெளிப்படுத்தியும் இந்திய மற்றும் உலக ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.