மதுரை ஏப்ரல் 29
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும் பிரதமர் அவர்களால் கடந்த 13.02.2024-அன்று “பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்” தகவை தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
மானியம்:
1 கிலோவாட் – ரூ.30,000/-
2 கிலோவாட் – ரூ.60,000/-
3 கிலோவாட் அதற்கு மேல் – ரூ.78,000/-
இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும்.
1 கிலோவாட் சூரிய தகடு, ஒரு நாளில், 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும், நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பங்களை “Pmsuryaghar” (www.pmsuryaghar.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, “பசுமையான, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


