தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் பிடிஓக்கள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தன்னார் வலர்கள் ஆகியோருக்கான சிறு பாசன ஏரிகள் மற்றும் குளங்களை புதிப்பிப்பது குறித்த பயிற்சி பட்டறை, தருமபுரி பச்சமுத்து மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் சிறுபாசன கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் எதிர்கால நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவலுக்காக பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும் கிராமப்புறங்களில் நிலையான நீர் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்துவது காலநிலை மீள் தன்மையை மேம்படுத்துவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த முகாமில் கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, அறக்கட்டளை நிர்வாகி வெங்கடேசன், அரூர் டிவிஎஸ் சேவை அறக்கட்டளை குழுமம் ஜெயபால் ஸ்ரிநிவாசா, நீர்வளத்துறை மேற்பார்வை பொறியாளர் ராமச்சந்திரன், ஓசூர் மக்கள் சமூக அமைப்பு பிரசாத் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகள் துறை ,பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பிடிஓக்கள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தன்னார் வலர்கள் ஆகியோருக்கான சிறு பாசன ஏரிகள்



