ராமநாதபுரம், ஏப்.29
ராமநாதபுரம் தேவிபட்டினம் அருகே ஷிபான் நூர் குளோபல் அகாடமி சிபிஎஸ்இ பள்ளியின் 8 வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ராமநாதபுரத்தில் பிரபல எலும்பு முறிவு டாக்டர் கலீல் ரகுமான், டிவி புகழ் பேச்சாளர் செந்தில் ஆகிய சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளியில் கல்வி விளையாட்டு கலை நிகழ்ச்சி போன்றவைகளில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
பள்ளியின் தாளாளர் டாக்டர் மன்சூர் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை கல்வி சேவைக்காக ஆற்றிய பணிகள் சாதனை புரிந்த ஆசிரியர்கள் சாதனை புரிந்த மாணவ மாணவிகளின் திறமைகளை கூறியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தப் பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறந்த மாணவ மாணவிகளை உருவாக்கி ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதனை மாணவர்களை உருவாக்குவதே முதல் நோக்கமாக கொண்டு பெருமை சேர்க்கவே அனைவரும் முயற்சி செய்து பணியாற்றி வருகிறோம் என்று பெருமைப்பட பேசினார்.
பள்ளியின் செயலாளர் டாக்டர் நூருல் ஹவ்வா, இணை செயலாளர் டாக்டர் முகம்மது நெளபல் அப்தாலின் ஆகியோர் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினர். மாணவர் மேகநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாணவி நமிலா டியானா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். பள்ளியின் முதல்வர் அருள் ஜெகன் ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவிகளின் ஓவியங்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தது பெற்றோர்களை மிகவும் கவர்ந்திருந்தது. பள்ளி ஆண்டு விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் சிவக்குமார் வெகு சிறப்பாக செய்திருந்தார்.
விழாவில் டாக்டர்கள் ஹிதாயத்துல்லா, ஷம்யா நெளபல், நூர் தெளபிக்,ஷிபானா சஹானி, மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துணை முதல்வர் சிவக்குமார் நன்றி கூறினார்.