அருமனை, பிப்- 18
கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த கட்டணத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்த்து விடுவதாக கூறி மாணவரிடம் இருந்து ரூபாய் 8,500 முதல் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களை வாங்கி மோசடி செய்வதாக புகார் எழுந்தது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (36) என்பவர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் இந்த பணத்தை வசூல் செய்ததாக தெரியவந்தது.
இது தொடர்பாக குமரி மாவட்டத்திலிருந்து அருமனை பகுதியை சேர்ந்த சில மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பணம் மற்றும் சான்றிதழ்களை இழந்து விட்டு கல்லூரியில் சேர முடியாமல் தவித்துள்ளனர். இது குறித்து அருமனை பகுதி மாணவர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தேவகோட்டைக்கு சென்று அலெக்சாண்டரை கைது செய்து அருமனைக்கு அழைத்து வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சிவகங்கை, குமரி மாவட்டங்களை சேர்ந்த 52 மாணவர்களிடம் இந்த மோசடி நடந்தது தெரியவந்தது. சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் பெற்று மோசடி செய்தது அலெக்சாண்டர் ஒப்புக்கொண்டார் போலீசார். போலீசார் அவரை கைது செய்துள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


