தருமபுரி அடுத்த பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலின் ஏழாம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து பம்பை மேலத்துடன் காவடி மற்றும் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து முருகர் வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் செய்தனர். ஸ்ரீ முருகர், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்ச்சியில் 100 – க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கலந்து கொண்டனர். பிறகு முளைப்பாரி சீர்வரிசை ஆகியவை ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீ முருகர் வள்ளி தெய்வானைக்கு ஊர் மக்கள் சார்பாக சீர் வரிசை செலுத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாலை விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ சிவசுப்பிரமணி சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் விமர்சியாக நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி அடுத்த அனசாகரத்தில் உள்ள முருகர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பால் குடம் ஊர்வலம் மற்றும் தீ மிதிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



