நாகர்கோவில் பிப் 28
குமரி மாவட்டத்திற்கு தலைமை பொறுப்பு வழங்கி கௌரவிப்பு.
ஏஐசிசிடியூ11-வது அகில இந்திய மாநாடு தலைநகர் டெல்லியில் 24 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அகில இந்திய தொழில் சங்கத்தை சேர்ந்த 16 பிரதிநிதிகள் டெல்லி மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டு சிபிஐ எம் எல் தமிழ்நாடு மாநில குழு சார்பாக சிபிஐஎம்எல் (லிபெரேஷன் ) குமரி மாவட்ட செயலாளர் தோழர் எஸ் எம் அந்தோணி முத்து தலைமையில் கலந்து கொண்டனர்.
வெகு சிறப்பாக நடைபெற்ற ஏஐசிசிடியூ 11-வது அகில இந்திய மாநாட்டில் தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்கவும்,தொழிலாளர்கள் 4 தொகுப்பையும், 3 குற்றவியல் சட்டங்களையும் ரத்து செய்ய போராடுவது, கம்பெனி ராஜ்ஜியத்திலிருந்து இந்தியாவை விடுவிப்பது, பொது துறைகளை பொது விநியோகத்தை தனியார் மயமாக்குதலை தடுத்து நிறுத்த போராடுவது, பீடி,கட்டுமானம், மீன்பிடி, ரப்பர், தூய்மை பணியாளர்களுக்கு 100 நாள் கிராமப்புற வேலை திட்ட தொழிலாளர்கள் உழைப்பவர்கள் அனைவருக்கும் கவுரமான வேலை ஊதியம், ஓய்வூதிய மாதம் ரூ.10,000/- வழங்க போராடுவது,வெறுப்பு அரசியல் வன்முறை கார்ப்பரேட் மதவெறி பாசிசத்திற்கு எதிராக போராடுவது,ஜனநாயகத்தை அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பது,தொழிலாளர் உரிமை போரில் சிறைபட்டிருக்கும் பிரிக்கால் தொழிலாளர்கள் இருவர் விடுதலைக்காக போராடுவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நடைபெற்ற 11 வது மாநாட்டில் சர்வதேச தலைவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் பாசிச பிஜேபியை தோற்கடிக்கும் முழக்கத்துடன் தோழர் திபங்கர், தோழர் சங்கர், தோழர் ராஜுவ் டிம்பரி சிறப்புரையாற்றினர். நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு பொறுப்புகள் வகித்து சிறப்பாக பணியாற்றிய தோழர்களுக்கு மேலும் சிறப்புடன் செயல்பட தலைமை பொறுப்பு உயர்வு வழங்கப்பட்டது.
இதில் சிபிஐஎம்எல் லிபரேஷன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் எஸ் எம் அந்தோணி முத்துக்கு ஏஐசிசிடியூ 9-வது மாநாட்டில் தேசிய குழு உறுப்பினர், அடுத்து 10-வது மாநாட்டில் தேசிய செயற்குழு உறுப்பினர்,11-வது மாநாட்டில் ஏஐசிசிடியூ அகில இந்திய துனை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்ட தோழர்களான R.சுசீலா, தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய குழு உறுப்பினர்களாக தோழர்கள் c கார்மல், s தங்கலக்ஷ்மி, s சுனில்குமார் ஆகியோர்களும் தேர்வாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தலைமை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும், தலைமைக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.