ஆரல்வாய்மொழி, பிப்.06: ஆரல்வாய்மொழியில் அனுமதியின்றி அதிகளவு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிமுதல் டிரைவர் கைது உரிமையாளர் தலைமறைவு
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு திருநெல்வேலி மற்றும் சில மாவட்டங்களிலிருந்து கனிம வளங்கள் டாரஸ் லாரிமூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சில சமூக விரோத கும்பல்கள் அரசின் எந்தவித அனுமதியும் பெறாமலும் அனுமதித்த அளவை விட அதிக அளவு பாரங்களை ஏற்றிக்கொண்டு டாரஸ்லாரியில் கனிம வளங்களை கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல்கள் வந்ததன் அடிப்படையில் குமரி மாவட்ட எல்கை பகுதிகளில் போலீசார் கடுமையான வாகன சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் அதன் அடிப்படையில் நேற்று காலை ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அஜித்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருருந்தனர் அப்பொழுது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் எட்டு யூனிட் கிரஷர் பொடி ஏற்றப்பட்டு இருந்தது. இதனிடையே கிரஷர் பொடி ஏற்றியதற்கான அரசு அனுமதிச்சீட்டினை சோதனையிட்டபோது அதில் நாலு யூனிட் கிரஷர் பொடி மட்டுமே ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த டாரஸ் லாரியில் 8 யூனிட் கிரஷர் பொடி ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.இதனால் நாலு யூனிட் அதிகப்படியாக ஏற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் டாரஸ் லாரியின் ஓட்டுனர் குலசேகரம், கோட்டூர் கோணம், பள்ளிவிளைப் பகுதியை சார்ந்த மணி என்பவர் மகன் கிறிஸ்துராஜன் 42 என்பவரை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் கிரஷர் பொடி ஏற்றப்பட்டு வந்த டாரஸ் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அரசின் அனுமதியை விட அதிக அளவு பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது அடிப்படையில் டிரைவர் கிறிஸ்துராஜன் மற்றும் லாரியின் உரிமையாளர் திருவட்டார் ஆற்றூர் பகுதியை சார்ந்த நடராஜன் என்பவர் மகன் பிரதீஷ் 36 என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரதீஷ் தலைமறைவாக உள்ள நிலையில் கிறிஸ்துராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .