மார்ச், 29-
தேனி அருகே ஆண்டிபட்டி ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுநராக பணியாற்றி வருபவர் ரஞ்சித்குமார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை தனது பணியுடன் ஓய்வு நேரங்களில் சமூக பணியாற்றி வருகிறார்.மருத்துவக் குழுவின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்கு தானாகவே முன்வந்து இரத்த தானம் செய்து வருதல்,மாணவர்களுக்கான அரசின் மருத்துவத் திட்டங்களை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு தெரிவித்தல் போன்ற பல்வேறு சமூக பணிகள் செய்து வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி ஆண்டிபட்டி அருகே உள்ள சுந்தரராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற 61வது ஆண்டு விழாவில் இராஜதானி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரன், தலைமை ஆசிரியை சத்தியமணி,பள்ளி மேலாண்மை குழு தலைவர்,மற்றும் ஆசிரியர்கள்,ஆகியோர் சார்பில் விருது வழங்கி கவுரவப்படுத்தினர்.



