திருப்பத்தூர்:ஜன:08, திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு அடுத்த அருமல்பட்டு கிராமத்தில் கங்கை நாச்சியம்மன் கோவில் அருகில் நெல் கதிரடிக்கும் கலம் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்க திருப்பத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜியா அருணாச்சலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
புது நாடு மலைப்பகுதியில் பெரும்பாலான மலைவாழ் மக்கள் விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர்கள். இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் வழிகாட்டுதலில் விவசாயிகளின் குறையை நீக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் நெற்கதிர் அடிக்கும் கலத்தினை உடனடியாக அமைக்க மலைவாழ் திட்டத்தின் கீழ் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி தலைமையில், திருப்பத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜியா அருணாச்சலம் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் துக்கன், அனுமன், விஜய், ஆனந்தன், குப்பன், துணைத் தலைவர் அண்ணாமலை,ஊர் நாட்டாமை மற்றும் பலரும் கலந்து கொண்டனர். நெல் கதிர் அடிக்கும் களத்தினை அமைக்க பல நாள் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது கிடைத்துள்ளது என்று ஊர் பொதுமக்கள் அனைவரும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.