நாகர்கோவில், மே 22:
நாகர்கோவில் மாநகராட்சியில் அனுமதி பெறாத விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் மற்றும் மின் கம்பங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவுப்படி மாநகராட்சி நகர அமைப்பு அதிகாரிகள் அனுமதி பெறாத விளம்பரப் பேனர்கள் மற்றும் பிளக்ஸ் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பீச் ரோடு, இருளப்பபுரம், வடிவீஸ்வரம், மற்றும் வடசேரி ஆகிய பகுதிகளில் 50 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது. மாநகராட்சி முழுவதும் இது நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.