சூரம்பட்டி மே 15
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் ஈரோடு அதிமுக பிரமுகர் முருகானந்தம் மற்றும் டாக்டர் சிவமுருகன், சுமில்ராஜ், அருணாசலம், பாஸ்கரன், குணசேகரன், ராஜ மாணிக்கம், பன்னீர்செல்வம் குணசேகரன் ஆகியோர் கொடி நாள் நிதியாக ரூ 10 ஆயிரம் வழங்கினர்.
இது பற்றி முருகானந்தம் கூறும் போது காஷ்மீர் பஹல்காம் பிரச்சினை தொடர்பாக நடந்த போரில் பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்காக இந்த நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.