தஞ்சாவூர். அக்.14.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சர்வதேச பேரிடர் மீட்பு தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஊராட்சி அலுவலக பனங்கள் கட்டிடம் வளாகத்தில் இருந்து துவங்கியது.
பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து துவக்கி வைத்தார்
இந்த ஆண்டு கருப்பொருளான அடுத்த தலைமுறைக்கு உறுதி யான எதிர்காலத்தை உருவாக்கு தல் என்பதைவலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
பேரணிமுக்கிய வீதிகள் வழியாக பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கலந்து கொண்டனர் .பேரணி அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. அதைதொடர்ந்து பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மீட்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கத்தை மாவட்ட பேரிடர் மீட்பு பணிகள் அலுவலர் குமார் தலைமையில் வழங்கப்பட்டது.
பேரணியில் ஆப்தமித்ரா தன்னார்வலர்கள், முதல் நிலை தன்னார்வர்கள், ரெட் கிராஸ் தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணி திட்டம் ,சாரணை சாரணி இயக்கம் ஊர்காவல் படையினர், முன்னாள் படை வீரர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், தீயணைப்பு துறை, மருது பாண்டியர் கல்லூரி மாணவ மாணவியர்கள், சோழ தேசப்படை சங்கத்தினர் என 100க்கு மேற்பட்ட வர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட் சியர் இலக்கியா, வட்டாட்சியர் அருள்ராஜ், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சிவகுமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், மாவட்ட ரெட்கிராஸ் வைஸ் சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.