திருப்பத்தூர்:டிச:17, திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் ஊராட்சி என்.எம் கோயில் வட்டம் பகுதியில் தேசிய கால்நடை நோய்கள் கட்டுபடுத்தும் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கான 6 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்.
இந்த சிறப்பு கால்நடை முகாமில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுடன் வந்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு மழை மற்றும் பனிக்காலங்களில், கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது குறித்து பல்வேறு ஆலோசனக்களையும்,தாதுஉப்பு மற்றும் இதர புரதசத்துக்களையும் கால்நடைத்துறை அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த சிறப்பு முகாமில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.



