பூதப்பாண்டி – நவம்பர் -05-
குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு சொந்தமான காளிகேசம் உள்ளிட்ட வன சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதற்கு வாகன நுழைவு மற்றும் தனிநபர், கூட்டு குழு அனுமதி சீட்டு பெற செலுத்த வேண்டிய கட்டணத்தை க்யூ ஆர் கோடு மூலமாக செலுத்தும் வசதியை மாவட்ட வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது,இதனை சுற்றுலா வரும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தல்
குமரி மாவட்டம் என்பது சுற்றுலா பயணிகளின் மனதில் இடம் வகிக்கும் மிக முக்கியமான சுற்றுலா தலமாகும்இங்கு கடற்கரை, மலைகள், சமவெளிகள், பூங்காக்கள் என ஏராளமான சுற்றுலா பகுதிகள் உள்ளன.இதில் சுற்றுலா பயணிகளால் மிகவும் ஆர்வமுடம் செல்லும் பகுதியாக வனத்துறைக்கு சொந்தமான காளிகேசம், கீரிப்பாறை வனசுற்றுலா தலங்கள் இருந்து வருகிறதுஇந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் செல்ல வாகன நுழைவு மற்றும் தனிநபர்,கூட்டு குழு அனுமதி சீட்டுகள் பெற வனத்துறை சார்பாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதுஇதனிடையே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நுழைவு சீட்டு பெற செலுத்த வேண்டிய கட்டணத்தை க்யூ ஆர் கோடு மூலமாக செலுத்தும் வசதியை குமரி மாவட்ட வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை சுற்றுலா வரும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என வனத்துறை சார்பில் கேட்டு கொள்கிறார்கள்.