தஞ்சாவூர் மே 28
தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை கருணா சுவாமி கோவிலில் நடந்த பொம்மை பூப்வோடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
தஞ்சாவூர் கரந்தையில் உள்ள பெரிய நாயகி அம்மன் சமேத கருணாசுவாமி என்கின்ற வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது இந்து சமய அறநிலைத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தா னத்திற்கு உட்பட்ட இந்த கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலமாகும் இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக் கும் முற்பட்டதும், கரிகால் சோழன் மன்னனுக்கு அருள் பாலித்து வசிஷ்ட மகாமுனிவரால் பூஜிக்கப்ப ட்ட தலமாகவும், விளங்கி வருகிற து
இந்த கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா ஆண்டுதோறு ம் சிறப்பாக நடைபெறுவது வழக்க ம், அதன்படி இந்த ஆண்டுக்கான சப்தஸ்தான ஏமூர் பல்லக்கு திரு விழா கடந்த 9ஆம் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது, தொடர்ந்து 13ஆம் தேதி கொடியேற்றபட்டு, தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்க ளில் வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கண்ணாடி பல்லக்கில் சுவாமி எமூர் புறப்பாடு நடைபெற்றது .அலங்கரிக்கப்பட்ட வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மனும், கண்ணாடி பல்லக்கில் கருணா சுவாமி, பெரிய நாயகி அம்மனும் சிறப்பு அலங்கார த்தில் எழுந்தருளினர்.
மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லக்கினை தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர் பல்லக்குகள் ஏமூர் சமஸ் தான தளங்களான வசிஷ்டேஸ்வ ரர் கோவில் (கரந்தை) தஞ்ச புரீஸ் வரர் கோவில் (வெண்ணாற்றங் கரை) வசிஷ்டேஸ்வரர் கோவில் (தென்குடி திட்டை )சொக்கநாதர் கோவில் (கூடலூர் ) ராஜராஜேஸ் வரர் கோவில் (.கடகடப்பை) கைலாசநார்கோவில் (புன்னைநல் லூர்) பூமாலை வைத்தியநாதர் கோவில் ( கீழவாசல் )ஆகிய ஏழு ஊர்களுக்கும் புறப்பட்டுச் சென்ற ன.
இந்த நிலையில் ஏமூர் புறப்பாடு முடிந்ததும், பல்லக்குகள் மீண்டும் கருணா சுவாமி கோயிலை வந்து அடைந்தது. இதனையடுத்து பல்லக்கில் உள்ள சுவாமி, அம்மனு க்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்