By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டடம்
இராமநாதபுரம்மாவட்டம்

பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டடம்

Last updated: October 11, 2024 11:29 am
October 11, 2024
51 Views
Share
SHARE

பசும்பொன்னில் தேசியத் தலைவர் திருமகனார் முத்துராமலிங்க தேவர் மண்டபத்தில் ரூ.1.55 கோடி மதிப்பேட்டில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டடம் 

 

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு 

 

 

ராமநாதபுரம், அக்.11-

 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேசியத் தலைவர் தேவர் திருமகனார் முத்துராமலிங்க தேவர் மண்டபத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தை பால்வளத் துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் முன்னிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தேவர் திருமகனார் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் மிக முக்கியமான ஒருவராக திகழ்ந்தவர் ஆவார். அதுமட்டுமின்றி இப்பகுதியில் வளர்ச்சிக்கு பாடுபட்டு பொதுமக்களின் மனதில் தெய்வீக திருமகனாராக போற்றக்கூடிய சிறந்த தலைவராக உள்ளார். அத்தகைய தேசியத் தலைவருக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 2007 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது தேவர் திருமகனார் நூற்றாண்டு விழா நடைபெற்றது ஒட்டி அவருக்கு மணி மண்டபமும் மற்றும் அவர் வாழ்ந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பித்து தந்தவர் கலைஞர் அவர்கள் தான். அதுமட்டுமின்றி தேவர் திருமகனார் பெயரில் கமுதி திருநெல்வேலி உசிலம்பட்டி போன்ற இடங்களில் கல்லூரிகள் கட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

மேலும் தென்னகத்தில் தேசியத் தலைவர்களுக்கு சிலை வைக்கப்பட்டு வந்த நிலையில் முதன் முதலாக மதுரையில் மாபெரும் சிலை வைத்து இந்திய திருநாட்டின் தலைவரை வைத்து சிறக்க 

 வைத்ததும் கலைஞர் அவர்கள் தான். அதேபோல் ஆண்டுதோறும் தேவர் திருமகனார்  நினைவு நாள் பிறந்தநாள் ஜெயந்தி விழாவையொட்டி ஆட்சி இருக்கும் போதும் சரி இதுக்கு முன்னரும் சரி பசும்பொன் நினைவு இடத்திற்கு வருகை தந்து தேவர் திருமகனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வந்தார்கள். அதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் வருகை தந்து மரியாதை செலுத்தி செல்கிறார்கள் தற்போது இப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க விழா காலத்தில் அதிக அளவு பொதுமக்கள் வருகை தந்து வணங்கி செல்வதை ஒட்டி அவர்கள் தங்கி செல்வதற்கு ஏதுவாக ரூ.1.55 கோடி மதிப்பில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி ஆகியவை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டுமான பணிகள் நடைபெற்று,  வரும் 30ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு தேவர் திருமகனார் ஜெயந்தி விழாவில் பயன்பாட்டிற்கு பயன்படுத்த உள்ளன. 

காத்திருப்போர் கூடத்தில் சுமார் 1000 பேர் தங்கி சென்றிடவும் மேலும் ஆண்கள் பகுதி பெண்கள் பகுதி மாற்றத்திறனாளிகள் என தனித்தனியே பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக சென்றிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பகுதியில் தேவையான திட்டங்கள் மற்றும் வசதிகள் விரிவுபடுத்தி தரப்படும். 

இவ்வாறு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். 

முன்னதாக தேவர் திருமகனார் நினைவிடத்திற்கு பால் வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

ஆய்வின்போது அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ( இராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி, மதுரை மண்டல பொதுப்பணித்துறை பொறியாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் குருதிவேல் மாறன், கமுதி யூனியன் சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் வைத்தியலிங்கம், அருணகிரி, ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் டாக்டர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை
திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை போதை பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம்
மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு
முத்தரையர் சங்கத்தின் சதய விழா 40 மாணவிகளுக்கு பரிசு
காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் மே 12ல் சித்ரா பௌர்ணமி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

புலியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

October 3, 2024
91 Views
புதுக்கடை அருகே வீட்டில் நின்ற பசுமாடு திருட்டு; போலீசில் புகார்
குழித்துறை ஜங்ஷனில் பயணிகள் நிழலகம்; நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
தமிழ்நாடு நீர்ப்பாசன ஏரி கால்வாய் நலச்சங்கம் மாநாடு
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account