சென்னை , ஜன-28,
டாக்டர் அகர்வால் ஹெல்த் கேர் நிறுவனத்தின் ஈக்விட்டி தொடக்கநிலை பங்கு , பொது பங்கு வெளியீட்டிற்கான ஐ.ஓ.பி (ஆஃபர்) வெளிடப்பட்டடது. இதன்மூலம்
ஒரு ஈக்விட்டி பங்குக்கு ரூ382/- முதல் 402/- வரை விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தொடக்க நிலை பொதுப்பங்கு வெளியீடு ஐபிஓ (ஆஃப்ர்) முறையில், 2025 ஜனவரி 29 அன்று தொடங்கி 2025 ஜனவரி 31 அன்று முடிவடையும் .
குறைந்தபட்சம் 35 ஈக்விட்டி பங்குககளை முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பங்குகளை வாங்க வரம்புகள் தளர்த்தப்பட்டு 35 பங்குகளின் பன்மடங்கிற்கும் மேலாக முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 பெருநகரங்கள், சிறு நகரங்களில் 193 பராமரிப்பு சேவை அமைவிடங்களையும் ஆப்பிரிக்கா கண்டத்தில் 9 நாடுகளில் 16 கண் மருத்துவ சேவை மையங்ககள் கொண்ட நம்பகமான நிறுவனமாக விளங்குகிறது.