தருமபுரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகா லயம் இணைந்து நடத்தும் தர்மபுரி 6-ஆவது புத்தகத் திருவிழா 2024 தருமபுரி அடுத்த பாரதிபுரத்தில் உள்ள மதுராபாய் சுந்தரராஜ ராவ்திருமண மண்டபத்தில் அக்டோபர் 4 முதல் 13 வரை 2024 நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் மாணவ ,மாணவிகளுடன் அமர்ந்து புத்தக வாசிப்பு நிகழ்ச்சியை ஆட்சி தலைவர் துவக்கி வைத்தார்.இதில் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் புத்தகப் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.



