நாகர்கோவில், டிச. 11 –
குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி. செல்வகுமார்.
நடிகர் தாடி பாலாஜி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல்வேறு திரைப்படங்களின் துணை நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளில் பங்களித்து வருகிறார். அது மட்டுமின்றி முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர்.
இந்நிலையில் தாடி பாலாஜி குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தகவல் அறிந்த புலி பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் மருத்துவ செலவிற்காக 1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். இதற்கு திரையுலகினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.



