திண்டுக்கல் மே. 12
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது விழாவில் கட்டிட பொறியியல் , இயந்திர பொறியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறைகளைச் சேர்ந்த சுமார் 159 மாணவ மாணவிகள் தங்கள் பட்டங்களை பெற்றனர் .
இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றகட்டிட பொறியியல் துறையில் இருந்து மூன்று இளநிலை மாணவர்கள், இயந்திர பொறியியல் துறையில் இருந்துநான்கு இளநிலை மாணவர்கள் என 11 மாணவர்கள் இடம்பெற்றனர்.அவர்களுக்கு கல்லூரியின் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது . இவ்விழாவிற்கு CO டெக்னோ டெக்ஸ் ஈரோடு நிர்வாக இயக்குனர் வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளையும் பட்டங்களையும் வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரியின் முதன்மை தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம் மற்றும் திருஷ்டி சூர்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது கல்லூரி முதல்வர் முனைவர் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார் . இந்த ஆண்டு நடைபெற்ற கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 180 மாணவ மாணவிகள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . இவ்விழாவில் ஏராளமான பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .